ஞாயிறு, 13 மே, 2012

எந்த கட்சி நம் கட்சி


இன்று தமிழகத்தில் நால்வர்கள் ஒன்றுகூடி பேசினால் பேசுபவர் தவறு செய்யும் அரசையோ,தவறு செய்யும் தலைவரையோ சாடி பேசினால் உடன் நீ எந்த கட்சி என்று எதிர் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழகத்து பத்திரிக்கை களும் தொலைகாட்சி நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒருகட்சியின் முகமூடியை அணிந்தே வளம் வருகின்றன.தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் அங்கம் வகிப்பவராகவோ அல்லது ஏதாவது தனிப்பட்ட கொள்கையுடைய அமைப்புகளின் ஆதரவாளராகவோ கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று முற்போக்காக சிந்திப்பதாக கூறிக்கொள்ளக்கூடிய கட்சியை சேர்ந்தவர்கள் கூட விரும்புகின்றனர்.ஆனால் உண்மையில் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையாளர்கள்  எந்த கட்சியையும் சேராதவர்களாகவே உள்ளனர் என்பதே உண்மை. உண்மையான அறிவுஜீவிகள் யாரும் எந்தக்கட்சியையும் கண்முடி தனமாக ஆதரித்து ஒருகட்சி சார்புடையவராக இருக்க வாய்ப்பே இல்லை.


அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் என்றால் இவர்கள் தி.மு.. சார்புடையவர்கள் என்றும்,சத்துணவு பணியாளர்கள்,டாஸ்மாக் பணியாளர்கள் என்றால் .தி.மு. வினர் என்றும் தமிழகத்தில் பிரித்துவைத்துள்ளனர்.ஆனால் உண்மைநிலை தொழிலாளர்கள் அப்பொழுது உள்ள சூழ்நிலைகளை கொண்டே எக் கட்சிக்கும் வாக்களிக்கின்றனர்.ஒருவர் ஒவ்வொரு கட்சியிலும் உள்ள ஒரு சில கொள்கையினை பிடித்தவராக இருக்கக்கூடாது என்று நினைக்கின்றனர்.ஒரு கட்சியை சார்ந்தவர் தன் சுய சிந்தனைகளை அடகு வைத்து விட்டு கட்சி என்ன சொன்னாலும் அதையே வேதவாக்காக கொள்ள வேண்டுமென்று எண்ணுகின்றனர்.உதாரணமாக சேது சமுத்திர திட்டத்தினை அண்ணா காலத்திலிருந்து ஒன்றுப்பட்ட தி.மு. பின்பு .தி.மு. என ஆதரித்து வந்தன.ஆனால் இன்று கட்சிதலைவி ராமர் பாலம் என்றவுடன் ஆம் ஆம் என கட்சி தொண்டர்கள் ஆமாம் சாமிகளாக போய் உள்ளனர்.தை திங்கள் தான் தமிழர் புத்தாண்டு என்று ஒரு .தி.மு. காரன் ஒருவன் கூட சிந்தித்து கட்சி தலைமை முடிவில் இவ்விசயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று அறிவித்தால் கட்சியில் தொடரமுடியுமா? என்றால் கண்டிப்பாக தொடரமுடியாது.தி. மு. வில் குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்து பேசிவிட்டு கட்சியில் தொடரமுடியுமா?இலங்கை சென்று லட்சம்பேர் விதவையாக உள்ளனர் என்று சொல்லும் கட்சி அவ்விதவைகளும்,தமிழர்களும் கொன்றவர்களுடன் தான் சேர்ந்து ஒன்றுபட்ட இலங்கையாகவே இருக்க விரும்புகிறார்கள் என்று கூறினால் அதை எதிர்த்து பேச அக் கட்சியில் ஆளில்லை.கேரளாவில் தனது கட்சி ஆட்சியில் இருந்தால் அதற்கு பரிந்துபேசுவது ஆனால் கேரளத்து கட்சிகாரர்கள் முதலில் கேரளத்தன் பின்பே கட்சிகாரர்களாக உள்ளனர்.புதுக்கோட்டை நிலவரத்தை பார்த்த பின்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் விட்டு கொடுக்கும் கட்சியில் சிறந்த கட்சி என்ற பட்டம் கொடுத்து இனி வரும் காலம் எல்லாம் இது போன்ற தேர்தல்தான் எனவே இனி தேர்தலில் பங்கு பெறாமல் இருந்திடவேண்டும் என முடிவெடுக்க கட்சியினர் அறிவுறுத்துவார்களா?அரசியல் சாக்கடை தான் அதற்காக இறங்கி சுத்தம் செய்யாமல் இருக்கமுடியுமா என்கின்றனர் அரசியல்வாதிகள். பொதுவானவர்களோ நாங்கள் தான் சாக்கடையில் மனிதன் இறங்கி வேலைசெய்வதை நிறுத்த வேண்டும் என்பவர் தானே என்கின்றனர்.
தமிழக அரசியல் வாதிகளை மற்ற மாநில அரசியல் வாதிகள் கொள்ளையிலும் கொள்கையிலும் முந்திக்கொண்டுள்ளனர். மேற்குவங்கத்தில் மம்தாகட்சியினர் இடதுசாரிகளுடன் சேர்ந்து டீ அருந்தகூட தடைவிதிக்கின்றனர் எனில் இம்மாதிரி ஊர் நீக்கத்திற்கு ஒப்பான அரசியல் கட்சிகளின் காட்டுமிராண்டி தனத்தினை பார்ந்த பின்பு எக்கட்சியில் சேர்வது?கர்நாடக பி.ஜே.பி அரசு மற்றும் அங்கு நிலவும் அரசியல் காட்சிகளை பார்க்கும் பொழுது சுரங்க கொள்ளையில் தொடர்பிருந்தால் மட்டுமேஅரசியல் செய்ய முடியும் என தெரிகின்றது.இனி சாமனியர்கள் அரசியலில் ஈடுபடமுடியாத பொழுது எதற்கு எக்கட்சிகளையும் நாம் ஆதரிக்க வேண்டும்.எனவே அனைத்து அரசியல்கட்சிகள் மீதும் மக்களுக்கு பெரும் அதிருப்தி கொண்டிருப்பதால் பெருபாண்மையினர் என்றும் என்னை போன்ற எக்கட்சியையும் சேராத சோத்து கட்சியினரே.
.ஷாஜஹான்,திருமங்கலம். மதுரை.9942522470.

கருத்துகள் இல்லை: