செவ்வாய், 11 செப்டம்பர், 2012

நடப்புச்செய்திகள்


நடப்புச்செய்திகள்


மதுபான விலை உயர்வு

செய்திகள்:

தமிழகத்தில் 6820 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கிடைக்கிறது. மது பாட்டில்களின் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது புதிய விலை நேற்று அமலுக்கு வந்தது. இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.1000 கோடி வரை அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்படி குவார் ட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், ஆஃப் பாட்டில் ரூ.15 முதல் ரூ.20 வரை யிலும், ஃபுல் பாட்டிலுக்கு ரூ.20 முதல் ரூ.45 வரை விலை உயர்ந்துள்ளது.


மதுபான வகை குவார்ட்டர் ஆஃப் ஃபுல்
எம்.சி ரூ.80 ரூ.160 ரூ.320
ஓல்டு மங்க் ரூ.70 ரூ.140 ரூ.280
எஸ்.என்.ஜெ ரூ.80 ரூ.160 ரூ.320
மானிட்டர் ரூ.70 ரூ.140 ரூ.280
பிரிட்டிஷ் எம்பயர் ரூ.160 ரூ.320 ரூ.640
மார்ப்பியஸ் ரூ.140 ரூ.280 ரூ.560
ராயல் சேலன்ஜ் விஸ்கி ரூ.140 ரூ.280 ரூ.560
எரிஸ்டாப் பிரிமியம் ரூ.130 ரூ.260 ரூ.520
கோல்டன் கிரேப் ரூ.70 ரூ.140 ரூ.280
அனீபி பிராந்தி ரூ.80 ரூ.160 ரூ.320
கிளப் ராயல் விஸ்கி ரூ.80 ரூ.160 ரூ.320
எம்.ஜி.எம் ஆப்பில் ஓட்கா ரூ.80 ரூ.160 ரூ.320
ஷிவாஸ் பைன் பிராந்தி ரூ.70 ரூ.140 ரூ.280
சீசர் பிராந்தி ரூ.110 ரூ.220 ரூ.440
செலிபரசேன் ரம் ரூ.90 ரூ.180 ரூ.360
வி.எஸ்..பி பிராந்தி ரூ.90 ரூ.180 ரூ.360
பிரிகான்ஸ் நெப்போலியன் ரூ.90 ரூ.180 ரூ.360
ஓல்டு சீக்ரட் ரம் ரூ.70 ரூ.140 ரூ.280
ஓல்டு சீக்ரட் பிராந்தி ரூ.80 ரூ.160 ரூ.320
டயமண்ட் பிராந்தி, விஸ்கி ரூ.70 ரூ.140 ரூ.280
ஆபீசர்ஸ் சாய்ஸ் ரூ.80 ரூ.160 ரூ.320
ஓல்டு காஸ்க் ரம் ரூ.90 ரூ.180 ரூ.360
கூரியர் நெப்போலியன் ரூ.110 ரூ.220 ரூ.440
கோல்கொண்டா ஒயின் ரூ.70 ரூ.140 ரூ.280
போர்ட் ஒயின் ரூ.90 ரூ.180 ரூ.360

நமது உரை.
அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு மதுவிலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது.ஆனால் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்கைதரம் பன்மடங்கு கிழே இறக்கப்பட்டுள்ளது.எப்பொழுது உயர்ந்தது இப்பொழுது கீழிறங்க என்கிறீர்களா? உண்மைதான் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்கைதரம் தற்பொழுது மேலும் பன்மடங்கு இறங்கி கேள்விகுறியாகி உள்ளது.மதுவிலக்கு வர இருப்பதாக பலபிரபல பத்திரிக்கைகள் போட்ட பொழுதும் அரசு சார்பில் எதையும் மறுக்க இல்லை. இதன் காரணமாக பல டாஸ்மாக் ஊழியர்களுக்கு திருமணம் தடைபெற்றுள்ளது.மதுவிலக்கு கொண்டுவந்தாலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும் என்ற உறுதி கொடுக்கப்படவில்லை.அம்மா அவர்களால் நியமிக்கப்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் 9ஆண்டுகளுக்கு பிறகும் பணிநிரந்தரம் உள்ளிட்ட எந்த கோரிக்கையும் ஏற்கபடாமல் தற்போதைய விலைவாசி உயர்வில் சிக்கி வாடிக்கையாளர்களிடம் கெஞ்சியும்,பிச்சை கேட்டுமே ஊழலில் உழன்றுவருக்கின்றன.டாஸ்மாக் ஊழியர்களுக்கு நேர்மையான ஊதியத்தை வழங்கி சமுதாயத்தில் தலைநிமிர செய்யவேண்டியது டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் தற்போதைய அவசியமாகும்.


பாவம்  ஓரிடம் பழி ஓரிடம்.


செய்திகள்:
வேலூர்: வேலூர் மாவட்டத்தில், முறைகேடு செய்த, 53 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.வேலூர் மாவட்டத்தில், 284 டாஸ்மாக் கடைகள், 75 பார்கள் உள்ளன. அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வது, தண்ணீர் கலந்து விற்பனை செய்வது, 24 மணி நேரமும் திறந்திருந்து விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் நடப்பதாக, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை, 108 கடைகளில் சோதனை நடத்தினர்.இதில், பல்வேறு முறைகேடுகள் செய்த விற்பனையாளர்கள், சூப்பிரைஸர்கள் என காட்பாடி தாலுகாவில், 13 பேர், குடியாத்தம் தாலுகாவில், நான்கு, ஆம்பூர், 6, வாணியம்பாடி, 4, திருப்பத்தூர், 11, வாலாஜா பேட்டை, 4, ஆற்காடு ,11 உள்பட, 53 பேரை, மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


நமது உரை:

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை விற்பனைக்கு யார்காரணம் என பலபிரபல தினசரிபத்திரிக்கைகள் கட்டுரை வடிவாக வெளியிட்டபின்பும் டாஸ்மாக் நிர்வாகமும் அரசும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்காததோடு அப்பாவி டாஸ்மாக் ஊழியர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கையை எடுத்துவருவதை டாஸ்மாக் செய்திகள் தளம் வண்மையாக கண்டிக்கின்றது. வேலூரில் 60 ஊழியர்களை பலிகடாக்களாக மாற்றியுள்ளது.இந்நிலை தொடரும்பட்சத்தில் அதிகாரிகளின் மெகா ஊழல்களை அம்பலப்படுத்தி உரியதண்டனை பெற்றுத்தர அனைத்து ஊழியர்கள் மற்றும் சங்கங்களை ஒருங்கினைக்கும் பணியினை டாஸ்மாக்செய்திகள்தளம் செய்யும் என அறைகூவல் விடுக்கின்றது.


பார் அவலம் பாரீர்.

செய்திகள்:
டாஸ்மாக் பார்களில் மதுபானம் விற்பனை செய்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மதுபான பிரியர்கள் மது அருந்த வசதியாக டாஸ்மாக் மதுபான கடைகள் அருகே பார் வசதி செய்யப்பட்டு உள்ளது. பார்கள் தனியார் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகள், பார்கள் காலை 10 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடவேண்டும். ஆனால் பல இடங்களில் பார் உரிமையாளர்கள், இரவு 10 மணிக்கு மேலும் சரக்கு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் சென்றன. இந்நிலையில், பார் விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றும்படி அனைத்து பார் உரிமையாளர்களுக்கும் இரு நாட்களுக்கு முன் அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களும் பார் உரிமையாளர்களை நேரில் அழைத்து பேசியுள்ளனர். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்போ, பின்போ பார்களை திறந்து வைத்திருப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்க மாவட்ட டாஸ்மாக் மேலாளர், மாவட்ட கலால்துறை உதவி இயக்குநர், காவல்துறை ஆகிய மூன்று துறைகள் அடங்கிய கூட்டுத் தணிக்கைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுத்தணிக்கை நடவடிக்கை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது


நமது உரை:
பார்களில் நடைபெறும் அட்டுழியங்களை நமது டாஸ்மாக் செய்திகள் தளம் தனிக்கட்டுரையாக "பார் அவலம் பாரீர் "என்ற தலைப்பில் வெளியிட்டது தாங்கள் அறிந்ததே.பார்களின் உரிமம்களை முறையான டெண்டர் விடாமல் அந்ததந்த பகுதிஆளும் கட்சியின் செயலாளர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு ஒப்பனைக்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறுவது அரசே ஒரு நாடகத்தண்மையுடன் செயல்படுவது நகைப்பிற்கு உரியது.பார்களையும் அரசே ஏற்று நடத்தும்பட்சத்தில் தற்பொழுது தமிழகத்தின் விலையில்லா திட்டங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: