செவ்வாய், 30 அக்டோபர், 2012

சங்கடம் தீர்க்குமா?சங்கங்கள்



சங்கடம் தீர்க்குமா?சங்கங்கள்
டாஸ்மாக்கில் மதுபானக் கடைக்கு மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்,பார் உதவியாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகமுன்னுரிமை அடிப்படையிலும் முன்வைப்புதொகைகட்டியும் எடுக்கின்றார்கள் என்று தெரிந்த பட்டதாரிகள் தங்கள்வீட்டு பெண்களின் நகைகளை அடமானம் வைத்து அரசு சார்ந்தபணி எப்படியும் நமக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என எண்ணி பணியில் சேர்ந்தனர்.சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பலர் மதுக்கடை என்பதால் பணியில் சேர தயங்கினர்.மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் ஆட்கள் எடுக்கப்பட்டு சென்னையில் பணியாற்ற செய்தனர். பெரிய எதிர்பார்ப்புடன் பணிக்கு சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் 16மணிநேரவேலைப் பளுவும்,திருட்டு நடந்தால் ஊழியரையே பலிசுமத்திய காரணங்களால் இரவுதங்கி 24மணி நேர பணியாளர்களாக உழைத்து விற்பனையை பன்மடங்கு உயர்த்தினர்.பார் உரிமம்தாரர்களின் மிரட்டல்,அதிகாரிகளின் லஞ்சம், மிகைநேரபணிபோன்றவைகளை கண்டு மிரண்ட ஊழியர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்து அதன் முலம் அரசுஊழியர்களின் சலுகைகளை பெறலாம் என எண்ணி வேலைகொடுத்த அம்மாபெயரிலேயே திருப்பூர் பகுதியில் சங்கம் ஆரம்பித்தனர்.சங்கம் ஆரம்பித்தவர்கள்மீது பொய் வழக்கு போட்டும்,தவறான குற்றச்சாட்டுகளை கூறியும் டாஸ்மாக்கிலிருந்து விலக்கினர்.இதில் பயந்த பணியாளர்கள் சங்கம் அமைக்கின்ற முடிவினை தவிர்த்தனர்.



ஆட்சிமாறியும் காட்சிமாறாத கதை.
அம்மா ஆட்சிமாறி கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் இவர் தொழிலாளர்கள் விசயத்தில் நல்லமுறையில் நடந்துகொள்வார் என்றும் நமக்கு எப்படியும் விடிவுகாலம் ஏற்பட்டுவிடும் என்று எண்ணிய டாஸ்மாக் பணியாளர்களுக்கு கலைஞர் ஆட்சியில் மாற்றான் தாய் நடத்தையே சந்தித்தனர்.அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் பணிநிரந்தப்படுத்தப்பட்ட பொழுது டாஸ்மாக்கில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் இன்றுவரை பணிநிரந்தரப்படுத்தப்படவில்லை. இது மட்டுமில்லாமல் துணை முதல்வரை சந்தித்து பணி நிரந்தரக்கோரிக்கையினை  தொ.மு. வினர் வைத்தபொழுது நீங்கள் அனைவரும் அந்தம்மா ஆட்சியில் நியமிக்கபட்டவர்கள் இல்லையா? நீங்கள் எல்லோரும் அந்தம்மாவின் ஆட்கள் என எனக்கு தெரியாதா? என கூறியதோடு மட்டுமில்லாமல் தொழிலாளர் சங்கங்கள் சில ஒன்றிணைந்து கடை அடைப்பிற்கு அழைப்புவிடுத்தபொழுது அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் அரசினை மிரட்டிபார்க்கின்றார்கள் என்றும் மதுவிலக்கு கொண்டுவந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என மிரட்டி பயம் காட்டியதோடு மட்டுமில்லாமல் கடைகள் தோரும் காவல்துறையை ஏவி கடைஅடைப்பு போராட்டத்தினை தோல்வியடைய செய்தார்.அதன் பலனை தேர்தலில் சந்தித்தார்.
சங்கங்களின் நிலை.
டாஸ்மாக்கில் சென்ற ஆட்சியின் ஒரே பலன் சங்கங்கள் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது மட்டுமே.அதன் காரணமாக பல சங்கங்கள் தோன்றின.டாஸ்மாக்கில் சங்கங்கள் துவங்கிய காலகட்டத்தில் சி..டி.யூ,..டி.யூ.சி,அரசு பணியாளர் சங்கம்,தொ.மு.,அண்ணா தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் உருவாகின. இவற்றில் தொ.மு. மற்றும் அண்ணா தொழிலாளர் சங்கத்தினர் அவரவர் ஆளும்கட்சியாக இருக்கும் காலத்தில் நகரின் பெரியகடைகளை பெற்று தங்களை வளப்படுத்த மட்டுமே சங்கங்களை பயன்படுத்துகின்றன.எதிர்கட்சியாக மாறினால் மற்ற கம்யூனிஸ்ட் சார்புடைய சங்கங்களுடன் இணைந்து போராடுவது என்ற உயரிய சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றன. சி..டி.யூ,..டி.யூ.சி,அரசு பணியாளர் சங்கம் ஆகிய கம்யூனிஸ்ட் சார்புடைய சங்கங்கள் ஓரளவு சிறப்பாக செயல்படுகின்றன.சங்கங்களின் சிற்சில போராட்டங்களால் வேலைநேரம் சற்றுக் குறைக்கப்பட்டு,வருடவிடுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சங்கங்களும் போராட்டங்களும்.
டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்சனைகளில் சங்கங்கள் இரண்டுஆட்சியிலும் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தினாலும் தங்களுக்குள் ஒற்றுமை இன்மையால் குறிப்பிட தக்கவகையில் வெற்றியினை பெறமுடியாமலேயே இருந்துவருகின்றன.17.03.2010 ல் கடைஅடைப்பு போராட்டத்தினை டாஸ்மாக் பணியாளர் சங்கம்(அரசு பணியாளர் சங்கம் இணைப்பு) தன்னிச்சையாக மற்ற சங்கங்களை கலந்துகொள்ளாமல் நடத்தியது.அதற்கு அதிகாரிகள் எதிர்ப்பதற்கு முன்னால் அதே பெயர்கொண்ட ..டி.யூ.சி சங்கத்தினர் மதுரையில் கடையடைப்பு செய்தவர்களின் கடைபூட்டினை உடைக்க உதவினர்.முதலில் கடைஅடைப்பு செய்த சங்கமும் ஒற்றுமைக்கு வழிவகுக்கவில்லை.கடைஅடைப்பை எதிர்த்து ..டி.யூ.சியும் தொழிலாளர் நலன்பேனாமல் சொந்தநலம் பேணி பின்னடைவை சந்தித்தனர்.பின்பு ஆகஸ்ட் 2010 கடைஅடைப்பு போராட்டத்திற்கு முன் அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எதிர் சங்கங்களுக்கு அழைப்பு கொடுத்தால் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம் எனக்கூறி போராட்ட துவக்கத்தின் போதினிலேயே தோல்வி பெறச்செய்தனர்.டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத் தலைவர் பழனிவேல் அவர்களின் பெரும் முயற்சியால் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் மிகைநேர பணிக்கு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகம் ரூபாய் 226000 வழங்கவேண்டும் என்ற தீர்ப்பினை பெற்றார்.இது சி..டி.யூ சங்க நீண்ட போராட்டத்தின் வெற்றி எனக்கொள்ளலாம்.இத்தீர்ப்பினை எதிர்த்து நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.இதை முன் உதாரணமாகக் கொண்டு வழக்கின் மூலமும் போராட்டத்தின் மூலமாகவும் நிர்வாகத்தினை தொழிலாளர் நலம் பேண செய்யவேண்டும்.
சங்கங்களிடம் ஊழியர் எதிர்ப்பார்ப்பு
சங்கங்கள் தங்களிடையே உள்ள கட்சிவேறுபாடுகளையும்,மனமாச்சரியங்களையும், போட்டிகளையும் மறந்து நிர்வாகத்திற்கும் அரசிற்கும் எதிராக மிகப்பெரிய போராட்டத்தினை ஒருங்கிணைந்து நடத்த வேண்டும் என்றும்,டாஸ்மாக் பணியாளர்களிடையே வசூலிக்கும் நன்கொடைகளுக்கு ஒழுங்கான வரவுசெலவு அறிக்கையினை ஆண்டுதோறும் வெளியிட்டும், ஆண்டு பேரவைகள் சரிவர நடத்தாமலும் நடத்தினாலும் முன்னமே தேர்தெடுத்த நிர்வாகிகளை ஒப்புக்கு அறிவித்து வருவதை நிறுத்தி உண்மையில் டாஸ்மாக் பணியாளர்களுக்காக உழைப்பவர்களை தேர்தெடுக்க முன்வரவேண்டும்.அதிகாரிகளிடம் சமரசம் செய்யாதவர்களாக டாஸ்மாக் அலுவலக வாசல்களில் தகவல்பலகை அமைத்து அதிகாரிகளின் ஊழல்கள்,தங்கள் தரப்பு நியாயங்கள், போராட்டங்கள் போன்றவைகளை மக்களுக்கும் உளவுதுறையினருக்கும் தெரிவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை.

கருத்துகள் இல்லை: