புதன், 27 பிப்ரவரி, 2013

தொலை தொடர்பு முன்னேற்றம்


தொலை தொடர்பு  முன்னேற்றம்.
25.02.2013
அன்று பி.எஸ்.எல்.வி.20  'சி-20' ராக்கெட்விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து நமது ஜனாதிபதி முதல் கடைநிலை மக்கள் வரை மகிழ்ச்சியும் இஸ்ரோ விங்ஞானிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்துவந்த நேரத்தில் எனது தொலைபேசி மற்றும் இனணயதள இனைப்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் முடிந்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளரால் சரி செய்யப்பட்டது.அவரிடம் என்னங்க இப்படி ஒரு புகாருக்கு ஒரு வாரம் கழித்து சரிசெய்கின்றீர்களே? என கேள்வி எழுப்பினால் பி.எஸ்.என்.எல் லில் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையும்,கேபிள் பழுது என்றால் ஒப்பந்த பணியாளர்களே சரி செய்வதாலும் தாமதம் தவிர்க்க இயலாது எனக்கூறினார்.சரி உங்கள் ஊதியம் தான் எவ்வளவு எனகேட்க நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் என்றார்.தினக்கூலி தான் என்றாவது பணி நிரந்தரம் செய்வர் என்ற நம்பிக்கையில் கடந்த 5 ஆண்டாக பணியாற்றுவதாக கூறினார்.480 நாட்கள் தொடர் பணியாற்றினால் பணிநிரத்தரம் செய்யவேண்டுமே மத்திய அரசு நிறுவனமாயிச்சே எனவினவியதற்கு அதெல்லாம் ஏட்டளவில் தான்.முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டிய மத்திய மாநில அரசுகள் ஒப்பந்த பணியாளர்கள் என ஆட்கள் எடுத்து வாழ்நாள் முழுவதும் பணிநிரந்தரம் செய்யாத பொழுது தனியார் நிறுவனங்களில் எப்படி நிரந்தர பணியாளர்களை எடுப்பர்.


இந்தியாவில் எங்கு தொழிலாளர் நலன்பேண படுகின்றது.பி.எஸ்.என்.எல் நிரத்தர பணியாளர்கள் ஊதியம் மாதம் ரூபாய் 25000 ஆனால் அவர்கள் கேபிள் பழுது பார்க்கமாட்டார்களாம்.உண்மையாக உழைப்பவர்களை மதிக்காத நமது மண்ணில்,தொழிலாளர் சட்டங்களை மதிக்காத நமது மண்ணில் பி.எஸ்.எல்.வி.200 ஏவினாலும் தொலைதொடர்புதுறை முன்னேறாது.

கருத்துகள் இல்லை: