வெள்ளி, 29 மார்ச், 2013

ரொட்டி முந்தியா? ‘புட்டி’ முந்தியா?



ரொட்டி முந்தியா? ‘புட்டி’ முந்தியா?



மட்டகரமான சரக்குகளை மண்டி விட்டு, நடுரோட்டில் மட்டையாகிக் கிடக்கிற குடிகாரப் பக்கிகள், நிமிர்ந்து உட்கார்ந்து காலரை நிமிர்த்தி விட்டுக்  கொள்ளும் படியான தகவல் இது.


மனிதனை மதி மயங்கச் செய்கிற லாகிரி வஸ்துவான மது, ஏதோ இன்று, நேற்றைய கண்டுபிடிப்பல்ல. ஆதி மூதாதையர் காலம் தொட்டு, மனித இனத் தின் மிக நீ...ண்ட வரலாற்றுப் பயணத்தில், நிழல் போல அதுவும் இணைந்தே நம்முடன் நடந்து வந்து கொண்டிருக்கிறது. ‘கோழி முந்தியா; முட்டை  முந்தியா’ என்பது குழப்பவாதிகள் காலம், காலமாக போட்டுக் கொண்டிருக்கிற விடுகதை. ஆனால், மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் அடுத்த கட்டத் துக்குப் போய் விட்டார்கள். அவர்களது லேட்டஸ்ட் ஆய்வுப்படி, பூமியில் தானியங்களைக் கொண்டு மனித இனம் உணவுப்பொருட்களை தயாரிப்பதற்கு  முன்னதாகவே, ‘ஒரு குவார்ட்டர் தயார் பண்ணிக் கொடு மாமு’ என்று ‘ஆர்டர்’ கொடுக்கிற லெவலுக்கு உச்சக்கட்ட நாகரீகத்தில் உயர்ந்து நின்றி ருக்கிறார்கள் என (திட்டவட்டமாகவே) தெரியவந்திருக்கிறது.

ஞாயிறு, 24 மார்ச், 2013

ஆட்கொல்லி மேல்நாட்டு சரக்குகள்!


- -  - - - - - - - - - -

குடிமகன்களின் மேலான கவனத்துக்கு...!

- -  - - - - - - - - - -


பொழுதுபோக்குக்கு குடிப்பவர்கள், பொழுதெல்லாம் குடிப்பவர்கள்... வாராந்திரப் பார்ட்டிகளில் ‘ஜஸ்ட்’ கம்பெனி கொடுப்பவர்கள்... இதில் நீங்கள் எந்த  வகையறாவாக இருந்தாலும் சரி; ஐந்து நிமிடம் ஒதுக்கி இதை படிப்பது உங்கள் உடல் / மனநலத்துக்கு மிகவும் உகந்த விஷயம். காசையும் கொட்டி,  கபால மோட்சமும் அடைந்து விடக்கூடாது என்கிற நல்லெண்ணமே இந்தக்கட்டுரை உருவாக்கத்துக்கான நோக்கம். கண்டதையும் குடித்து, கண்ணீர் அஞ் சலி போஸ்டர்களாக மாறிய கோடானுகோடி குடிமகன்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!


மது என்பது டாஸ்மாக் நிர்வாகத்தின் தனிப்பட்ட கண்டுபிடிப்பு அல்ல. பூமியின் மிகத் தொன்மையான வஸ்துகளில் அதுவும் ஒன்று. முறையாக அதை  பயன்படுத்தினால், மூளையை சுறுசுறுப்பாக்கலாம். உடல் சோர்வுக்கு விடைகொடுக்கலாம். சுருங்கச் சொல்லின், மது என்பது குடிக்க மட்டுமே; குளிக்க  அல்ல. மட்டமான சரக்கில் தீர்த்தமாடி விட்டு, மறுநாள் காலையில் நெஞ்சு எரிகிறதே; வயிற்றைப் பிசைகிறதே என்று புலம்புவது நல்ல குடிமகனுக்கு  அழகல்ல. போதை என்கிற பெயரில் ஆளைப் பதம் பார்க்கிற ஆபத்தான சரக்குகள் உலகமெங்கும் தடைகளையும் கடந்து, ரகசியமாக புழங்கிக்  கொண்டுதான் இருக்கின்றன. நம்மூரில் பல்லி, பாச்சான் எல்லாம் போட்டு தயாராகிற கள்ளச்சாராயம் போல, உலகக் குடிமகன்களின் உள்ளம் கவர்ந்த  ‘டேஞ்சர் சரக்கு’களின் பட்டியல் இங்கே உங்கள் பார்வைக்கு:

ஞாயிறு, 10 மார்ச், 2013

இம்சை இலக்கு


இம்சை இலக்கு


மார்ச்மாதம் வந்துவிட்டாலே வங்கி மற்றும் அலுவலக நண்பர்கள் முதலில் தங்களுக்குள் பகிர்வது என்னவெனில் டார்கெட் அடைந்துவிட்டீர்களா? என்பதாக தான் இருக்கும்.ஆனால் நமது டாஸ்மாக் பொருத்தமட்டில் மாதம் தோறும் நாள் தோறும் டார்கெட் தான். இதற்கு பலிக்கடாக்களாக டாஸ்மாக் ஊழியர்களும்,டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் ,துணைமேலாளர்களும் அடங்குவர்.ஒவ்வொரு நாளும் சென்ற ஆண்டின் விற்பனையை போல் விற்றுவிட்டு அதிலும் 20 சதவித விற்பனை அதிகரிப்பினை அதிகாரிகளுக்கு காட்டவேண்டும்.இதில் ஊழியர்கள் பலர் விழிபிதுங்கி தன்னளவில் குடித்தாவது விற்பனை இலக்கினை அதிகப்படுத்திவிடுவோம் என அதிகாரிகளுக்கு அடிமையாய் இருந்த ஊழியர்கள் குடிக்கும் அடிமையாகி வருகின்றன. தற்போழுது கடை அருகே அரசியல்கட்சிகூட்டத்தினாலோ, திருமண விழாக்களினாலோ,யாருடைய இறப்பினாலோ விற்பனை அதிகரித்தால் ஊழியர்கள் அடுத்தஆண்டினை எண்ணிபயப்பட ஆரம்பிக்கின்றனர்.  அடுத்த ஆண்டு எப்படி இந்த விற்பனையை உயர்த்துவது என்று கவலை கொள்ள ஆரம்பிக்கின்றனர்.மொத்தத்தில் கடையில் விற்பனை அதிகரித்தாலும் குறைந்தாலும் ஊழியர்கள் பாடு திண்டாட்டம் தான்.
இந்நிகழ்வினை பற்றி எழுதும் பத்திரிக்கைகள் கடைசியாக நமது டாஸ்மாக் துறை அதிகாரிகளிடம் இலக்கு பற்றிவினா எழுப்பினால் இலக்கு என்று ஒன்றும் இல்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.நமது டாஸ்மாக் துறை மந்திரியையும் இதே பல்லவியை பாடுகின்றார்.தைரிய லட்சுமியின் ஆட்சியில் இலக்கிற்காக பல டாஸ்மாக் ஊழியர்கள் பணி இழப்பினை சந்திப்பது பற்றி உண்மையை மறைப்பதிலிருந்து இது போன்று டாஸ்மாக் துறையில் இன்னும் எத்தனை உண்மைகளை மறைத்து வருகின்றார்களா?என்ற ஐய்யம் வராமல் இல்லை.

திங்கள், 4 மார்ச், 2013

தொழிலாளர் பாதுகாப்பு தேசியதினமா?


பட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி,பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி,பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி,பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் பலி டாஸ்மாக்கில் பணம் பாதுகாப்புக்கு கடையில் இரவுபடுத்து உறங்கிய கடைபணியாளர் தீ விபத்தில் பலி,வங்கியில் பணம் கட்ட சென்ற தொழிலாளிக்கு கத்தி குத்து,குடிமகன்களால் தொழிலாளிக்கு பாதிப்பு,பார் உரிமையாளர்களால் பாதிப்பு, இவற்றிக்கெல்லாம் மேலாக குடி அடிமையாகி டாஸ்மாக் தொழிலாளி மரணித்து வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருவது ஊடகங்களின் தினசரி செய்திகளாக வந்தாலும் இதற்கு மாற்றாக தொழிலாளர்கள் நலன் கருதி டாஸ்மாக் நிர்வாகம் எந்த நடவடிக்கையாவது எடுக்கின்றதா என்றால் ஏதுமில்லை.

சனி, 2 மார்ச், 2013

மதி(து) மயக்(ங்)கும் அரசியல்வாதிகள்



தமிழக அரசியல் களத்தில் இன்றைய திராவிடகட்சிகளின் துவக்க காலங்களில் அவர்கள் கொண்ட கொள்கை செய்த பிரச்சாரம் இன்று பெயரளவில் கூட அக்கட்சிகளில் இல்லை.அத்தோடு மட்டுமில்லாமல் தற்போதைய  உறுப்பினர்களுக்கு அவை தெரிவதும் இல்லை தெரிந்தாலும் அதை கொண்டு அவர்கள் கட்சியில் வளர்ச்சி அடையவும் வாய்ப்பில்லை. அதே நேரத்தில் கட்சிதலைவரின் வாரிசையும்,கட்சித்தலைமையை புகழ்பாடினால் மட்டுமே வளர்ச்சி.உதாரணமாக துவக்கத்தில் இவர்கள் கொண்ட கடவுள் மறுப்புகொள்கையாகட்டும், தனிமாநில கொள்கையாகட்டும், மது ஒழிப்பு கொள்கையாகட்டும் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு பன்னெடும்காலமாகிவிட்டது.இதுப்பற்றி எந்த
தமிழ்குடிமகனும் கவலையும்,நினைவில் வைத்து கேள்வி கேட்பதும் இல்லை.தமிழகமக்களின் ஞாபக மறதியே இன்றைய அரசியல்வாதிகளின் வளர்ச்சியின் துவக்கப்புள்ளி. சரி விசயத்திற்கு வருவோம்.