செவ்வாய், 30 ஏப்ரல், 2013

குடி குற்றம் யார் மீது?


தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனையை ஆரம்பித்தபின்பு சுமார் 3000 கோடி விற்பனையிலிருந்து 23000கோடியை நோக்கி ராக்கெட் வேகத்தில் மதுவிற்பனையின் அளவானது வானளவு உயர்ந்துள்ளது.இந்த குடி
குற்றத்திற்கு யார் காரணம் என படூ சீரியஸாக சிந்தித்து கட்டுரைக்குள் நுழைந்தால் மன்னிக்கவும் இது அதுமாறியது இல்லாமல் புதிதாக சிந்திப்பவர்களுக்காக.சமீபத்திய தமிழக திரைப்படங்களில் ஓருபாடலாவது டாஸ்மாக் பாரில் வைத்து எடுத்துவிடுகின்றனர்.அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள "கேடிபில்லா கில்லாடி ரங்கா" திரைப்படத்தில் "ஓரு புறப்போக்கு " என ஆரம்பிக்கக்கூடிய பாடலில் குடியை இந்த ஆண்டின் துவக்கத்தோடு நிறுத்திவிட எண்ணி மூன்று  நண்பர்கள் பாடுவதாக அமைந்த பாடல் இறுதியில் ஓரு புல் பாட்டில் ஆர்டர் கொடுத்து குடியை தமிழககுடிமக்களால் விடமுடியாது என்ற புரட்சிகர கருத்தினை பரப்பியிருப்பர்.நமது பங்கிற்கு அந்த பணியை இக்கட்டுரையில்  செய்துள்ளோம்.மது ஓழிப்பு  நண்பர்கள் மன்னிக்கவும்.


ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

மாமே ஹேங் - ஓவரா...?



தண்ணீரில் மிதக்கும் மீன்களுக்கு ஜலதோஷம் பிடிப்பதில்லை - இது இயற்கையின் நியதி. எப்போதும் ‘தண்ணீரில்' மிதக்கும் குடிகார கும்கிகளை, ‘ஹேங்-ஓவர்' போன்ற இம்சைகள் எட்டியும் பார்ப்பதில்லை. மாதத்துக்கு ஒரு நாள், ‘நல்லது; கெட்டது'க்கு நாக்கை நனைக்கிறவர்கள் நிலைமைதான் பரிதாபம். வயிற்று வலி, தலைவலி என்று மறுநாள் காலையில், மண்டகப்படி காத்திருக்கும்.


முதல் நாள் இரவு, முங்கி எழுந்து விட்டு, மறுநாள் காலையில் தலையைப் பிடித்த படி, ஒரு வேலையும் ஓடாமல், ‘பாம்' (வலி நிவாரணிதான்!) தடவிக் கொண்டு உட்காருகிற அவஸ்தையை, ஆங்கிலத்தில் ‘ஹேங்-ஓவர்' என்கிறார்கள். இந்த ‘ஹேங்-ஓவர்' தாக்கினால், எலுமிச்சை ஜூஸ் குடி, வெற்றிலை பாக்கு போடு என்றெல்லாம் ‘கரை கண்டவர்கள்' பாட்டி வைத்தியம் சொல்கிறார்களா?


வியாழன், 18 ஏப்ரல், 2013

சாலையோர டாஸ்மாக்-கின் அவசியம்





பாரதத்தில் நமது தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவருவது என்பது சாத்தியமற்றது என்பதும் உலகில் எங்கும் மதுவிலக்கு உண்மையில் இல்லை என்பதும் நாளும் அறிந்தவர்களுக்கு தெரிந்த செய்தியாக இருந்தாலும் நம்மில் சிலர்  நடைமுறைசாத்தியமற்ற மதுவிலக்கினை கொண்டுவர விரும்பி அரசினை நிர்பந்திப்பதற்காக நீதிமன்றம் சென்று சாலைவிபத்திற்கு சாலையோர டாஸ்மாக்கே காரணமென சாலையோர டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்ற தீர்ப்பினை பெற்றுள்ளனர். ‘‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள கடைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அகற்றவேண்டும்‘‘ என்று தீர்ப்பு வெளியானது. நீதிமன்ற தீர்ப்பீனை விமர்சிப்பது நமது நோக்கம் அல்ல.ஆனால் தமிழகத்தின் நகர மற்றும் கிராமங்களின் கட்டஅமைப்பு குடியிருப்பு ,வியாபார பகுதி,சாலையோர ஒதுக்குபுறப்பகுதி என உள்ளது.இதில் பெரும்பாலும் டாஸ்மாக் கடைகள் வியாபார மற்றும் சாலையோர ஒதுக்குபுறப்பகுதி களில் இருந்து வந்தது.. தற்பொழுது இந்த டாஸ்மாக் கடைகள் நகரங்களின் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்து வருகின்றது.இதனால் சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பல இடங்களில் இனிதே இடமாற்றம் நடைபெற்றுவருகின்றது. தேசிய நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள 504  டாஸ்மாக் மதுபான கடைகளில் 400 மேற்பட்ட கடைகள்  வேறு இடங்களில் திறக்கப்பட்டது. டாஸ்மாக் பார்களை எடுத்து நடத்தும் ஆளும்கட்சியினர் எப்படியும் கடைகளை அடைக்காமல் பார்த்து குடியிருப்பு பகுதிகளுக்கு மாற்றி வருகின்றனர். நாளடைவில் டாஸ்மாக் கடையானது குடியிருப்பு பகுதிகளிலும் சர்வசாதாரணமாக இனி அமைக்கப்படும்.தமிழக மக்களும் அதற்காக தங்களை மாற்றிபழகிகொள்வர்.இந்த நிகழ்வானது இன்னும் டாஸ்மாக்கிற்கும் பொதுமக்களுக்குமான நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி  அதிகாலையில் உழைக்க செல்லும்முன்பே டாஸ்மாக் கடைக்கு வந்து வியாபாரத்தினை அதிகப்படுத்துவர்.