திங்கள், 13 மே, 2013

நவீன பரதேசி


மசாலா நிறைந்த நமது தமிழக திரைப்படதுறையில் அத்திபூத்தார் போல எப்பொழுதாவது தொழிலாளிகள் படும் கஷ்டங்களை எடுத்துகாட்டிடும் திரைப்படம் வெளிவரும். மாநகரங்களில் துணிக்கடைகளில் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை "அங்காடி தெரு" என்ற திரைப்படம் மூலம் கண்ட நமக்கு அந்த வரிசையில் கமர்சியல் அதிகம் கலக்காமல் வந்து நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் பாலாவின் "பரதேசி" படம் பார்த்தவுடன் அன்றைய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படும் இன்னல்கள் இன்றைய டாஸ்மாக் ஊழியர்களின் நிலையினை எல்லாவிதங்களிலும் ஒத்திருப்பதினைக் கண்டு நாளைய தலைமுறையினர் நமது வாழ்கையினையும் படம்பிடிப்பது திண்ணம் என்பதினால்  அக்கதைக்கான எனது முன்னுரையை இங்கே தீட்டுகின்றேன். பரதேசி படத்தின் தேயிலை தோட்டத் தொழிலாளிக்கும் நமது டாஸ்மாக் ஊழியருக்குமான ஒற்றுமைகளை பட்டியலிடுகின்றேன்.




அங்கே கங்காணி மூலம்
ஆள்பிடித்து உழைப்பு சுரண்டல்
இங்கே கலெக்டர் மூலம்
ஆள் எடுத்து உழைப்பு சுரண்டல்

அங்கே நோயோடு உயிர்பலி
இங்கேயும் குடிநோயினால்
பலர் மாண்டும் பலர் குடி,மனநோயுடனும்
வலம் வரும்கொடுமை.

அங்கே வருடத்திற்கு ஒருமுறை
பணம் காட்டி ஆட்கள் தக்க வைப்பு.
இங்கே அதிகாரிக்கு தண்டம் கட்டிவிட்டு
தாராளமாய் தவறிளைத்து சொற்ப காசினை
சம்பாரிக்க விட்டு தக்கவைப்பு.
விரைவில் பணிநிரந்தரம் என பணி
சேர்ந்த பொழுதிலிருந்தே பசப்புகாட்டி
உழைப்பாளி தக்கவைப்பு

அங்கே சிலர் வெள்ளைகாரர்களுக்கு
மாமாவாகி நல்லநிலையில்
இங்கே அரசியல்,அதிகாரிகளுக்கு
மாமாவாகி நல்லநிலையில்

அங்கே உதவிக்காக வந்து மதமாற்றம்
இங்கே உதவிக்காக வந்து கட்சிக்கு
ஆள் பிடிக்குது சங்கங்கள்.
அங்கே இறுதியில் வாரிசு வந்து
மாட்டிகொள்வது போல் நடந்துவிடுமோ
என அஞ்சி டாஸ்மாக் உழைப்பாளிகள்
இங்கே இன்னும் கேட்காத
ஒரே கோரிக்கை வாரிசுபணி.

அங்கே தேயிலைத்தோட்ட தொழிலாளி
பரதேசியெனில்
இங்கே டாஸ்மாக் தொழிலாளி
நவீன பரதேசி.

பத்துவருடங்களாகியும் பணி நிரந்தரம்
இல்லை.பணிபாதுகாப்பு இல்லை.
பணிபலன் கள் இல்லை .
இல்லை இல்லை என்பதற்கு எதிராக
பணியாற்றிட படைதிரள்வது எப்போது
பணியாளா?

.ஷாஜஹான்,99425 22470.
திருமங்கலம்.மதுரை.

கருத்துகள் இல்லை: