வியாழன், 4 ஜூலை, 2013

மதுகிண்ணங்கள்

சங்க கால குடிமகன்கள் தொண்டு தொட்டு நமது டாஸ்மாக் குடிமகன்கள் வரை தான் அருத்தக்கூடிய மதுவகைகளை அழகான குடுவைகளில் பாதுகாக்ககூடியவர்களாகவும் மற்றும் சிறந்த கோப்பைகளைக்கொண்டு மது அருந்தக் கூடியவர்களாக இருந்துவருவது அனைவர் அறிந்தது.பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்ற பழமையான சொற்றொடர் மூலம் பயன்படுத்தும் பாத்திரங்களில் முந்தைய சமுகத்தினர் அதிக கவனம் செலுத்தியது தெரியவருகின்றது. பண்டைய நாகரீகங்களை பற்றி தெரிவிக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அக்காலத்து மக்களின் பயன்பாட்டு பாத்திரபண்டங்களை கொண்டே நாகரீகத்தில் எந்த நிலைதனில் அம்மக்கள் இருந்தனர் என கூறுகின்றனர். பண்டைய கள் குடிக்கும் குடிமகன்களின் கள் அருந்தும் பாத்திரமான மண்குடங்கள் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டவைகளாக இருந்து வந்தது.கள் குடிமக்கள் தங்களது மீசையினை மிகப்பெரியதாக வளர்ப்பர்.இந்த மீசையினை கள் குடிக்கும்  மண்பானைகளில் விட்டபடியே கள்ளினை பருகுவர் அந்த பானையில் உள்ள தேனீகள் பூச்சிகளை வடிகட்டும் பில்டராக மீசைதனை பயன்படுத்தினர்.தற்போதைய பாண்டிச்சேரி மற்றும் கேரளா பகுதி குடிமக்கள் பிளாஸ்டிக் மக்குகளிலேயே கள் மற்றும் சாராயம் அருந்துகின்றனர்.தமிழக டாஸ்மாக் குடிமக்கள் பிளாஸ்டிக் கப்களிலேயே பார்கப்புகளுக்கிடையே குடித்து சாதனை படைத்து வருகின்றனர்.சரி வாருங்கள் கண்ணாடி மதுகோப்பைகளை பற்றி காண்போம்.


1.
பைண்ட் கண்ணாடி கோப்பைகள்:(pint  glasses)


 

இந்த கண்ணாடி கோப்பைகளானது அடிப்பாகம் முதல் மேல் பகுதிகள் உட்பட அனைத்தும் நல்ல உறுதியான கண்ணாடியினால் ஆனது.அதாவது புல்பாடி ஸ்ட்ராங்க்.நாம் இதில் மதுவினை அருந்திய பின்பு தான் வடிவேல் பாணியில்
பில்டிங் ஸ்ட்ராங்க் மேஸ் மட்டம் வீக் எனக்கூற வேண்டி வரும்.இந்த கிளாஸ் மாதிரியிலேயே விஷன் மதுகிண்ணங்கள் உருவானது. மதுவுடன் பார்வையிட்டால் அரேபிய குதிரை என வர்ணிக்க கூடிய அனுஷ்காவினை ஒத்திருக்கும்.

2.
துலிப் கண்ணாடி கோப்பைகள்: (tulip glasses)
இது பெல்ஜீய கண்ணாடி வகைகளை கொண்டு தயார் செய்யப்படுபவையாகும்.துலிப் கண்ணாடி குடுவைகள் மது அருத்துபவர்கள் பிடிப்பதற்கு மிகுந்த வசதியானது.குடுவையின் அமைப்பானது அழகிய இளம்பெண் நடனத்தினை ஒத்திருக்கின்றது.
3.கோபெல்ட்ஸ் மது கோப்பைகள்: (goblets)





இந்த வகை மதுகோப்பைகள் எகிப்திய மற்றும் ரோமானியர்கள் பயன்படுத்திய அமைப்பினை சார்ந்ததாகும்.மொகலாய மன்னர் ஜஹாங்கிர் முதன்முதலில் இந்தியா வந்த பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனியன் சர் தாமஸ் ரே யிடம் அதிகமாக  பரிசுப்பொருளாக பெற்றது வெளிநாட்டு மதுவினையும் மது கோப்பையினையும் தான்.
4.பீர் மக்குகள்: (beer mugs)





பீர் மக்குகள் மிக உறுதியான கண்ணாடியினை கொண்டு தயார் செய்யப்படுவதோடு 650எம்.எல்.வரை பிடிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.நீங்கள் எந்த நிலையிலும் சியர்ஸ் சொன்னாலும் உடைவது அரிது.பீர் பிரியர்களின் பீர் அருந்துவதற்கான ஒரே தேர்வு பீர் மக்குகளே ஆகும்.உலக பீர் தினம் மார்ச்1,ஏப்ரல்7,டிசம்பர்5 ஆகிய மூன்று தினங்களில் உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றது.நமக்கோ நண்பன் என்று பீர் வாங்கிதந்தாலும் அன்று பீர்தினம் தான் என்கீறீர்களா?
5.
பில்ஸ்னர் கண்ணாடி: (pilsner glass)

பில்ஸ்னர் கண்ணாடிகள் கீழ் பகுதி சிறியதாகவும் பருகும் பகுதி அகலமாகவும் வாசனையை முகருவதற்கு பொருத்தமானதாக அமைக்கப்பட்டுள்ளது.பில்ஸ்னர் கண்ணாடி கோப்பையில் பீர் அருந்துவதோடு ஒயின் பருகவும் சிறந்தது.
 
6.விஷன் கண்ணாடி: (weizen )

இது பைண்ட் கண்ணாடி வகையானது. ஜெர்மானிய கண்ணாடி வகைகளை கொண்டு தயார் செய்யப்பட்டவைகளாகும்.இது வரை மதுகிண்ணங்களின் வகைதனை சுவாரசியமாக தெரிந்து கொண்ட நமக்கு நாம் அன்றாடம் வீடுகளில்
பானங்கள் பருக பயன்படுத்தும் கிண்ணங்களை (டம்ளர்) பல பகுதிகளில் டவரா என்று அழைப்பதும் உண்டு.இன்று பெரும்பாலும் கிளாஸ் வகைகள் பிளாஸ்டிக்காக மாறிவருவதினை உடன் மாற்றவேண்டும். அத்தோடு இன்னும் பலகிராமங்களில் இரட்டை குவளை முறை மூலம் தீண்டாமை என்ற கொடிய மிருகத்தினை வளர்த்துவருகின்றனர்.நாளைய சமுகத்தில் தீண்டாமையை ஒழிக்க ஒன்றுகூடி உறுதி எடுப்போம்.

கருத்துகள் இல்லை: