சனி, 7 செப்டம்பர், 2013

டாஸ்மாக் மாற்றங்கள்

டாஸ்மாக் இணை இயக்குநராக திரு.மோகன் அவர்கள் நியமிக்கப்பட்ட பின்பு சென்ற ஆகஸ்டில் தினசெய்தித்தாள்கள் டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க முதல்வர் அம்மா அவர்கள் தனிக்குழு ஒன்றினை அமைத்து இருப்பதாக செய்திகள் வெளியிட்டன.அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கொள்முதல் அதிகாரி வேறு துறைக்கு மாற்றப்பட டாஸ்மாக்கில் மாற்றங்கள் பல தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மாற்றங்கள் என்பது மாறாதது என்ற பொன்மொழிக்கேற்ப டாஸ்மாக்கில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசையாக காண்போம்.மாற்றங்களினால் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பயன்பெறுவதும் ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தின் நிலையில் மட்டும் மாற்றம் என்பதே ஏமாற்றமாக மட்டும் இருந்து வருவதினை பற்றிய கட்டுரை
சரக்கு குவிப்பு:

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை டாஸ்மாக் கடைகளுக்கு, சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக அதாவது, 60 - 90 நாட்களுக்கு தேவையான சரக்குககள் அனுப்பப்பட்டு வந்தது.இதனால், அதிகமான அளவிற்கு சரக்கு இருப்பு வைக்கப்படுவதால், பல இடர்பாடுகளை டாஸ்மாக் ஊழியர்கள் சந்தித்தனர்.


அதிகாரிகள் மதுபான கொள்முதல் விபரம்(பீர் நீங்கலாக)
வ.எண்
ஆண்டு
கொள்முதல்
(பெட்டிகளில்)
விற்பனை
(பெட்டிகளில்)
தேக்கம்
(பெட்டிகளில்)
1.
2010 - 11ம் நிதியாண்டில்
485 லட்சம்
480 லட்சம்
5 லட்சம்
2.
2011-12ம் நிதியாண்டில்
542 லட்சம்
536 லட்சம்
6 லட்சம்
3
2012-13ம்
நிதியாண்டில்
586 லட்சம்
569 லட்சம்
17 லட்சம்
ஒரு பெட்டியின் சராசரி விலை ரூபாய் 4000 என வைத்தால் தேங்கியுள்ள குமட்டல் சரக்கு 17லட்சம் பெட்டிகளின் மதிப்பு என்ன? எதற்காக இவ்வளவு மதுபானங்களை கொள்முதல் செய்தனர். கோடிகளில் நடைபெற்ற பரிவர்த்தனையில் நடந்துள்ளவைகளை உங்களின்  கண்ணோட்டத்திற்கே விட்டுவிடுகிறேன்.
டாஸ்மாக்கே கடன் வாங்கும் கதை
வங்கிகளில் இருந்து, குறுகிய கால அடிப்படையில், ஆண்டுதோறும், 100 - 300 கோடி ரூபாய் வரை, கடன் வாங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த நிதியாண்டில், வழக்கத்தை விட, 1,300 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது. இதில், பெரும் தொகை, மது வகைகள் கொள்முதலுக்காக செலவிடப்பட்டதாக செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. சரிவிடுங்கள் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அடித்த மற்றும் அடிக்கும் கொள்ளைகளுக்கு நடுவே டாஸ்மாக் ஊழியர்கள் பட்டப்பாட்டினையும் தற்போது படும்பாட்டினையும் பார்க்கலாம்.
டாஸ்மாக் ஊழியர்கள் சந்தித்த இடர்பாடுகள்.
1.அதிகாரிகள் சரக்குதனை கொள்முதல் செய்வதற்காக ஊழியர்களை நிர்பந்தப்படுத்தி ஒவ்வொரு கடையிலும் மாதத்தில் மூன்று முறை 5 பெட்டிகள் வரை தங்களது சொந்தப்பணத்தினை கட்டி விற்பனையை அதிகப்படுத்தி காட்ட கூறினர்.
2.கடைகளில் இடப்பற்றாக்குறையால் பக்கத்துக்கடை மற்றும் அறைகளை தங்களது சொந்தப்பணத்தில் வாடகைக்கு எடுத்து
பாதுகாத்தனர்.
3.பலகடைகளில் பார்களில் வைத்த சரக்குகளை பார் உரிமதாரர்கள்
திருடியதால் இருப்புகுறைப்பாடு ஏற்பட தவணை பெற்று தங்களது சொந்தப்பணத்தினை கட்டி சரிசெய்தனர்.
4.கடைகொள்ளா சரக்கினால் அடுக்கப்பட்ட அட்டியல் சரக்குகள் கவிழ்ந்து விழுந்து பாட்டில் உடைந்ததற்கு தங்களது சொந்தப்பணத்தினை கட்டி சரிசெய்தனர்.
5.கடைகளின் உள்ளே நுகர்வோர் விரும்பிய சரக்கு இருந்தும் இடநெருக்கடியில் சரக்கினை எடுத்துக்கொடுக்க முடியாதமையினால் விற்பனை குறைவு ஏற்படவும் அதிகாரிகள் காரணமாயிருந்தனர்.
இவ்வாறு எல்லாம் மதுபான சரக்குகளை ஊழியர்களின் விருப்பத்திற்கு மாறாக கடைகளில் கொண்டு சேர்த்த அதிகாரிகள் தற்பொழுது கடைகளில் 7 நாட்கள் சரக்குகளை மட்டுமே இருப்பு வைக்க  புதிதாக உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தேக்கம் அடைந்துள்ள 17லட்சம் பெட்டிகளையும் எப்படியும் விற்று முடிக்க அடுத்ததாக ஊழியர்களை மறைமுகமாக நிர்பந்திக்க இருப்புகுறைபாடு ஏற்பட்டால் கீழ்காணும் முறைகளில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறிவருகின்றனர்.
வ.எண்
இருப்பு குறைபாடு
அபராதம்
நடவடிக்கை
1.
10 ஆயிரம் மற்றும் குறைவாக
24 சதவீதம்
----------------------
2
10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை
24 சதவீதம்
ஒரு மாதம் சஸ்பெண்ட்
3
25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை
24 சதவீதம்
 இரண்டு மாதம் சஸ்பெண்ட்
4
50 ஆயிரம் முதல், 99 ஆயிரம் ரூபாய் வரை
24 சதவீதம்
 மூன்று மாதம் சஸ்பெண்ட்
5
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்
"டிஸ்மிஸ்'
என மாவட்ட மேலாளர்களுக்கு  அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இன்றைய டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கையினாலும் குறைந்த ஊதியமே வழங்குவதாலும் சரியான எம்.ஆர்.பி விற்பனை செய்தால் கைநட்டமே ஏற்படும் என்ற நிலையிலும் வறுமையில் கூடுதல்விலை விற்பனை என்ற ஒரே தவிற்றினை நோக்கி செல்லும் ஊழியர்களை இனியும் தண்டிக்காமல் டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க திரு மோகன் அவர்களின் மூலம் முதல்வர் அம்மா அவர்கள் தனிகுழு அமைத்து இருந்தால் அந்தகுழு ஊழியர்களின் பிரச்சனைகளையும் கோரிக்கைகளையும் அறிய சங்கபிரதிநிதிகளையும் எம்மை போன்றவர்களையும் சந்திக்கவேண்டும். மத்தளத்தினை போன்று அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் ஊழியர்கள் இருபுறங்களும் அடிபடுவதிலிருந்து காப்பாற்றி பணிநிரந்தரப்படுத்தி சரியான ஊதியத்தினை வழங்கி 35000 டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு உதவிட டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.
வ.ஷாஜஹான்,திருமங்கலம்.
நன்றி.தினமலர் படங்கள் மற்றும் செய்தி.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நன்றாக உள்ளது.இருந்தபோதும் டாஸ்மாக்கில் நடந்த ஊழலை மூடிமறைப்பது போன்று உள்ளது.

ரமேஷ். சொன்னது…

டாஸ்மாக்கினை ஓழிக்க வழி சொல்லுங்கள்

S.M.Alishaw சொன்னது…

மக்களை நல்வழியில் நடத்தவேண்டிய அரசாங்கமே இதல்லாம் செய்யலாமா?