புதன், 23 அக்டோபர், 2013

துளையிட்டு மது திருடிய துணைகள் துயில்




வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு செல்லும் சாலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த மதுக்கடையின் சுவரில் துளைபோட்டு திருடப்பட்டு இருப்பதாக அந்த பகுதியினர் தெரிவித்த தகவலை தொடர்ந்து மதுக்கடை மேற்பார்வையாளர் ராஜ்குமார் நேற்று காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தார்.

அப்போது கடையின் சுவரில் துளைபோட்டு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து 100 அடி தூரத்தில் மது பாட்டில்கள் அடங்கிய சாக்குமூட்டையை தலைக்கு வைத்தபடி ஆண்-பெண் இருவர் தூங்கிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தலைக்கு மதுபாட்டில் மூட்டையை வைத்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் காவேரிப்பாக்கத்தில் உள்ள அய்யன்பேட்டைசேரி கிராமத்தை சேர்ந்த விஜயன்(வயது 35), அவரது மனைவி வள்ளியம்மாள்(30) என்பது தெரியவந்தது. அவர்களை எழுப்பி விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:-

புதன், 9 அக்டோபர், 2013

குடி விடு


திருமங்கலத்திற்கும் மதுரைக்குமான எனது தினசரி வேலைக்கான பயணங்களுக்கிடையே திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் பகுதிகளில் “குடிவிடு” என்ற நூல்வெளியீட்டு விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் என்னை இயற்கையாகவே அதன்பால் ஈர்த்தன. சரி என்னதான் சொல்கிறது நூல் மற்றும் பேச்சாளர்கள் என்பதனை அறியும் நோக்கில் அக்டோபர் 1ல் மதிய உணவிற்கு பின்பு ஒரு குட்டி உறக்கம் என்ற பெயரில் நீண்ட தூக்கத்தினை தொடர்கையில் திடீரென்று எழுப்பிய பொழுது மணி மாலை5 ஐ தாண்டி இருந்தது. உடன் எழுந்து குட்டி குளியலை போட்டுவிட்டு எனது பைக் தனை இயக்கி கியர்தனை முறுக்கி திருமங்கலம் நகர் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்நிலையங்களில் நாளை விடுமுறை என்பதால் இல்லம் சென்றடைய பலர் முண்டியடித்து பஸ்களில் இடம்பிடிப்பதும் சாலைகளை கடப்பதுமாக ஜனநெருக்கடிகளை கடந்து கொண்டிருக்கையில்  எனது கவனம் அனைத்தினையும் சாலையில் வைத்து திருமங்கலத்தினை கடக்கையில் மறவன்குளம் கண்மாய் அருகில் மாலையில் அடித்த வெயிலுக்கு  பகரமாக விண்ணவன் மழைச்சாரலினை வழங்க அந்த இனிய குளிர்காற்றினை கிரகித்தவனாக பைக் வேகத்தினை அதிகப்படுத்தி கப்பலூர் பாலத்தில் ஏறி இறங்குகையில் மயில்களின் அகவல்குரல்களை ரசித்துக்கொண்டே செல்கையில் கப்பலூர் காலனி மரங்களின் பறவைகள் நாங்கள் என்ன மயிலுக்கு குறைவானவர்களா என போட்டியிட்டு தங்களது ரீங்கார குரல் கொண்டு அந்தப்பகுதி முழுவதினையும் ஆக்கிரமித்தன,