புதன், 25 ஜூன், 2014

சரக்கு(வைன்) சரிந்த நிலையில் சப்ளை ஏன்?



'வைன்' (Wine) என்று சொல்லப்படும், திராட்சைப் பழத்தினால் உருவாக்கப்படும் மதுவகை உலகப் பிரசித்தி வாய்ந்தது. டாக்டர்கள் கூடச் சிலசமயங்களில் ஒரு கோப்பை வைனைத் தினமும் குடித்து வருவது நல்லது என்று சொல்வதுண்டு. யேசுநாதர் கூடத் தனது கடைசி விருந்தில், சிவப்பு வைனைத் தன் சீடர்களுக்குக் கொடுத்து, தன் இரத்தத்தை பருகுவதாக உதாரணமும் சொல்லியிருந்தார். யேசுநாதர் காலத்திலேயே இந்தத் திராட்சை மது திருமண விருந்துகளில் குடிக்கப்பட்டதற்கான சான்றுகள் பைபிளில் உண்டு. ஆனால் பைபிளில் சொல்ப்பட்டது மதுவல்ல, வெறும் திராட்சை ரசம்தான் என்று மறுப்பவர்களும் உண்டு. போகட்டும், இங்கு நாம் பேசப் போவது யேசுநாதரைப் பற்றியோ அல்லது பைபிளைப் பற்றியோ அல்ல. வைனைப் பற்றித்தான். அதிலும் ஒரு சின்ன, சிறப்பான ஒரு தகவலைப் பற்றிதான்.

. .
திராட்சை ரசத்தைப் பிழிந்து, அதை மதுவாக மாற்றுவதற்கான சில காரணிகளுடன் சேர்த்து, ஒரு சிறப்பான இடத்தில் பாதுகாப்பாகப் பலநாட்கள் வைத்துவிடுவார்கள். அதுவே 'வைன்' என்று சொல்லப்படும் மதுவாக மாறுகிறது. திராட்சையின் புளிப்புத்தண்மை, இனிப்புத்தண்மை, பச்சைத் திராட்சை, சிவப்புத் திராட்சை என்னும் வகைகளைக் கொண்டு, வைன், செக்ட், ஷாம்பைன் என்னும் மதுவகைகளாகப் பிரிக்கப்படுவது தனிக்கதை.

வெள்ளி, 20 ஜூன், 2014

டாஸ்மாக் சட்டப் பயிற்சி



முறைகேடுகளில் ஈடுபடும், டாஸ்மாக் ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து, மண்டல மேலாளர்களுக்கு சமீபத்தில்  பயிற்சி வழங்கப்பட்டது. , சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மண்டலமேலாளர்கள் பயிற்சியில் கலந்துகொண்டனர். டாஸ்மாக் தொழிலாளர் நலன் பொதுமேலாளர் ஹேமலதா உள்பட மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இப்பயிற்சி முகாமில் முறைகேடு மற்றும் அதிகாரிகளுக்கு கட்டுப்படாத  டாஸ்மாக் ஊழியர்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு எப்படி கையாள்வது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மண்டல மேலாளர்கள் தங்களது பகுதிகளில் மாவட்ட மேலாளர்கள் ,உதவி மேலாளர்கள்(சில்லரை விற்பனை), கிடங்கு மேலாளர்கள், சம்பந்தப்பட்ட இருக்கையாளர்களுக்கு மேற்கண்ட பயிற்சியினை விளக்கியுள்ளனர்.