சனி, 29 நவம்பர், 2014

அற்ப ஆயுசு

             

                                                                 அற்ப ஆயுசு 



2003ல் 36000 பேர்
பணியில் சேர்ந்திட
2013ல் 26104 குறைந்து
பரிதாபமாகி
அரசு கஜானா நிறைத்து
அற்ப ஆயுளில் கரைகிறோம்.
ஆன வரை போராடிட்டோம்
ஆயுசுல பணி நிரந்தரமாவோமா?
எதுவும் நிரந்தரமில்லை
ஏனிந்த உழைப்பாளிக்கு மட்டும்.
மறந்து போனோம் குடும்பத்தினை
மறத்தும் போனோம் வீணாய்
பணமோ அரசியல், அதிகாரிகளுக்கு
பலியோ பணியாளர்களுக்கு








          பார்ப்போம் வா ஒரு கை


பாரில் பிறக்கும் போதே 
கட்சியுடன் பிறக்கவில்லை
சங்கங்களுடன் பிறக்கவில்லை.
வயிற்றோடு தான் பிறந்தோம்.
பணிநிரந்தரமும்
பணி பாதுகாப்பும் பெற
பனியை கிழிக்கும்
ஒளி கதிராய்
ஓடி வா தோழா!
வாரிசுகளுக்காக
விரட்டு சொந்தப்பகையினை
வீறு கொண்டு புறப்படு
வரும் ஆண்டு
பணி நிரந்தரம் பணிநிரந்தரம்
பார்ப்போம் வா ஒரு கை

பணியாளனிடம் நிர்வாகத்தின்
பாச்சா பலிக்காது
பகத்சிங்கின் மறுபிறப்பே
பயமெதற்கு?
பட்டது போதும்
பறந்து வா
இழப்பதற்கு என்ன
இருக்கு இன்னும்
இளைய டாஸ்மாக் ஊழியா
இனியெல்லாம் நமது நாளே
பார்ப்போம் வா ஒரு கை

வ.ஷாஜஹான். திருமங்கலம்.

டாஸ்மாக் தினம்


இதேநாள் 29.11.2003அன்று டாஸ்மாக்சில்லரை மதுவிற்பனை துவங்கியநாள்
                
                      சிறைகதவுகளுக்குள் சிக்கிகொண்ட நாள்

டாஸ்மாக் உழைப்பாளிகளின் சிக்கல் குறித்த கவிதை


பட்ட மரங்கள்

பத்தாண்டுக்கு முன்
வைரம் பாய்ந்தவர்களாய்,
நிழல் தருபவர்களாய்,
வண்ணம் மிக்கவர்களாய்,
கனி தருபவர்களாய்...

இன்று
இளஞ்சாவுகளையும்,
இனிப்புநோயுடனே,
இளமையையும் இழந்து
பட்ட மரங்களாய்
பாம்புகளின் கூடமாய்
பன்னிரெண்டு மணி நாளுக்கு
பணியாற்றினாலும்
பகுதிநேர பணியாளனாய்
பற்றாக்குறை சம்பளத்தில்
பழகிய குடியால் தொடர்ந்து
டாஸ்மாக்கில்
லஞ்சமே லட்சியமாய்
லட்சங்களே இலக்காய்
அதிகாரிகள்.
லாகிரி விற்று
லாஸ்ஸில் நாங்கள்
உழைப்பாளிகள்
ஊதாரிகளாய் போனோம்
உலகில்.
விறகிற்காவது ஆவோமா?
வீண் கற்பனை...!
விஷசெடி விறகாவதில்லை.

வெள்ளி, 14 நவம்பர், 2014

இரவெல்லாம் மது விற்பனை இரக்கமில்லா அரசு


தமிழகம் முழுவதும் 24மணி நேரமும் எது கிடைக்கின்றதோ இல்லையோ மது கிடைக்கும். எப்படி? டாஸ்மாக் கடை திறந்து இருப்பது தான் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை தானே என்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் தமிழகநிலை தெரிய தமிழ்மகனாக இருக்கின்றீர்கள் என அர்த்தம். டாஸ்மாக் கடைதான் இரவு 10 மணிக்கு அடைக்கப்படுகின்றதே ஒழிய ஆளும் கட்சியினரால் நடத்தப்படும் பார்கள் 24மணிநேரமும் இயங்குகின்றன. இந்த இரவு நேர விற்பனைக்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை அடைக்கும் முன்பு இவர்கள் விரும்பும் சரக்குகளை கொடுக்கவேண்டும். இதில் சரக்கு வந்தவுடன் குடிமகன்கள் விரும்பும் சரக்கினை இரவு விற்பனைக்கு எடுத்து கொடுக்க வற்புறுத்துவர். இந்த சரக்குகளுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு உரிய தொகையை கொடுப்பார்களா என்றால் அதுவுமில்லை. விற்று முடித்து அவரிடம் கேட்டால் இவர் இவரிடம் கேட்டால் அவர் என அழைக்கழிப்பு வேறு.

சனி, 8 நவம்பர், 2014

முதல்வருக்கு வேண்டுகோள்

டாஸ்மாக் ஊழியர்கள் விரக்தியின் உச்சக்கட்டத்தினை அடைந்துவருவது நிதர்சனம். தற்போது நவம்பர் மாதத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட பல டாஸ்மாக் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதற்கு காரணமான நோட்டீஸ் கீழே




கோவையிலிருந்து எதிர்வினை என்ற பெயரில் தனிச்சுற்று மாத இதழ் டாஸ்மாக் ஊழியர்களின் குரலாக வெளிவருகின்றது. எதிர்வினைக்கு பாராட்டுக்கள்.