திங்கள், 26 ஜனவரி, 2015

மெர்சலான போதைக்கு முதலை பீர்

பீரின் ஆதி மூலக்கூறு பார்லி, திணை, சோளம் என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லோர் போலும் நாமும் குடித்து கவிழ்வது சுவாரசியம் இல்லை. ஆம் குடியிலேயே மெர்சலாகி மிதப்பதற்கு வேண்டுமே மோர். ஆம் கிவ் மி மோர். நம் குடியர்களின் பாதை போதை  மேலும் போதை. நம் குடிக்கென்று ஒரு வரலாறு வேண்டாம். சாராயத்தில் கஞ்சாவினை கலந்து அடித்தல். கள்ளுக்கிடையே போதை மாத்திரையை இணைப்பது. இப்படி பழமையையும் புதுமையையும் இணைக்கும் பாலம் அல்லவா நம் குடியர்கள்.
தமிழ்குடி உலகின் மூத்தகுடியாக இருந்தாலும் மொசாம்பிக் குடியர்கள் நம்மை முந்த பார்கின்றார்கள். ஆம் பாரம்பரிய பீர் தயாரித்து குடிப்பதில் வல்லவர்கள் மொசாம்பிக் நாட்டினர்.. உறை சாராயத்தினை மறைக்க நினைத்தாலும் அதன் வாசனையே காட்டி கொடுத்து விடும். மொசாம்பிக் குடியர்களோ இதில் கெட்டிக்காரர்கள். திணை கொண்டு தயாரிக்கும் பீரினை முதலைக்கறியில் ஊரவிட்டு குடிப்பர். என்னவோ தங்களுக்கும் நாவில் எச்சி ஊருக்கின்றது என நினைக்கின்றேன். இன்றும் கிராமத்து பெரிசுகளிடம் பேசினால் சுண்ட கஞ்சி கொடுத்த உறை போதை வாழ்க்கைக்கும் மறக்கமுடியாது என்பர்.

வியாழன், 22 ஜனவரி, 2015

சோடா பாட்டிலை மிஞ்சும் பீர் பாட்டில்


பிசாசு படத்தில் கதாநாயகன் விபத்து ஒன்றினை பார்த்து விடுவான். விபத்தின் நினைவிலிருந்து மீள முடியாமல் இருப்பான். படத்தில் மீளமுடியா துயருக்கு ஆலோசனை என்ன தெரியுமா? இரண்டு பீர் பாட்டிலை வாங்கி வயிற்றில் இறக்கு. இது வரை கூட பரவாயில்லை. குடிச்சுட்டு பாட்டிலை உடைச்சு போட்டு மனசில் உள்ள பாரத்தினை வெளியேற்று. செம ஐடியால்ல. உண்மை தான் பல குடியர்கள் சாரி குடிமகன்கள் பார் மற்றும் பல குடி இடங்களிலும் செய்து வரும் அநாகரிகம்  பாட்டில் உடைத்தல்.

இந்த பாட்டில் உடைக்கும் பழக்கம் எப்படி வந்திருக்கும்? சிறுவயதில் பால்புட்டியையும் தூக்கி போட்டு உடைத்து இருப்பார்களோ  இக்குடியர்கள். யூத திருமணங்களின் இறுதியில் மதுக்கிண்ணம் உடைப்பார்களாம். ஏனெனில் ஆதி ஜெருசலம் ஆலயம் உடைக்கப்பட்டதினை நினைவு கூறவும், திருமணம் என்றாலே  பிரச்சனை தான் என தெரிவிக்கவும், முதலில் உடைத்து விட்டால் இனி உடையாது பந்தம் எனவும் (ஜோசியன் இரண்டு மனைவி உனக்கு என்றவுடன் வாழை மரத்திற்கு தாலி கட்டி நம்மவர்கள் வெட்டுவது போல) ஏதோ ஒரு மூடபழக்கவழக்கமாக கண்ணாடி கிளாசினை உடைப்பர்.